நியூக்ளியர் கிட்ஸ்' சர்வதேச இசை நிகழ்ச்சி: ஹங்கேரி செல்லும் தமிழக மாணவர்கள்

ஹங்கேரியில்நியூக்ளியர் கிட்ஸ்' என்ற பெயரில் நடைபெறவுள்ள சர்வதேச இசை நிகழ்ச்சியில் பங்கேற்க கூடங்குளம் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஹங்கேரியில்நியூக்ளியர் கிட்ஸ்' என்ற பெயரில் நடைபெறவுள்ள சர்வதேச இசை நிகழ்ச்சியில் பங்கேற்க கூடங்குளம் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
ரஷிய அரசின் அணுமின் நிறுவனமான ரொஸாட்டம் (Rosatom) சார்பில், குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் நோக்கத்தில் - ஹங்கேரியில் நடத்தப்படும் நிகழ்வுதான் நியூக்ளியர் கிட்ஸ் ஆகும். இந்தச் சிறப்பு இசை நிகழ்வில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 79 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கூடங்குளத்தில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையப் பள்ளியைச் சேர்ந்த ராஜேஷ் விஸ்வ சுதன், பவித்ரா அனுப் மற்றும் நிஷ்சிதா பன் தேகர் ஆகிய மூன்று மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
வங்க தேசம், பெலாரஸ், சீனா, குரேஷியா, எகிப்து, ஹங்கேரி, இந்தியா, கஜகிஸ்தான், துருக்கி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்த நிகழ்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, ஏற்கெனவே பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஸிக்ஸ்ஸார்டு  (Szekszard) நகரத்தில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. பின்னர், மாஸ்கோவிலும் மற்ற முக்கிய ரஷிய நகரங்களிலும் விருந்தினர்களுக்காக இந்த நிகழ்ச்சி மீண்டும் காட்சிப்படுத்தப்படும்.
ரஷியாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களும், பாடகர்களும் கலந்து கொள்ள இருக்கும் இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு தி லோமோனோஸாவ்ஸ் ஸ்க்ரால் (The Lomonosov's Scroll) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கான படப்பிடிப்பு ஹங்கேரி, மாஸ்கோ போன்ற இடங்களில் நடைபெறும். 
உலகம் முழுவதுமுள்ள அணுமின் திட்டங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளிடையே நட்பை வளர்ப்பதும், நல்லிணக்கத்தை உருவாக்கி, வலுப்படுத்துவதும்தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதோடு அவர்களது படைப்பாற்றலைத் தூண்டிவிடவும், பல்வேறு கலாசாரங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமையும் என ரஷிய அரசின் அணுமின் நிறுவனமான ரொஸாட்டம் தெற்காசியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரிஆண்ட்ரே ஷெவல்யகோவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com