வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதைத் தவிர்க்க வேண்டும்

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வருகிற 10 நாள்களுக்கு ஒகேனக்கல்லுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வலியுறுத்தினார். 
வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதைத் தவிர்க்க வேண்டும்

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வருகிற 10 நாள்களுக்கு ஒகேனக்கல்லுக்கு வருவதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வலியுறுத்தினார். 
ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப் பெருக்கையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்புப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வருகிற ஒருவார காலத்துக்கு ஒகேனக்கல் அருவிகளில் நொடிக்கு 1,20,000 கன அடி நீர் வர வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்புக் கருதி, 10 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, பயணிகளின் வாகனங்கள் வனத் துறை சோதனைச் சாவடி அருகே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் 25 இடங்களில் வெள்ளப் பெருக்கால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆற்றுப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com