டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறப்பு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 19) தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை திறப்புக்கான பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்.
மேட்டூர் அணை திறப்புக்கான பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூலை 19) தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 100 அடியை எட்டியது. இந் நிலையில், வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. காலை 10.15 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 6 அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். 
மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியில் விழா நடைபெற உள்ளது. அணையின் வலது கரைப் பகுதியில் மேல்மட்ட மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியும் துவங்கும். விழாவுக்கான ஏற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை ஆய்வு செய்தார். 
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: விவசாயிகள் பயன்பெறும் வகையில் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த் தேக்கப் பகுதியில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்ஃபி எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com