நீதிபதி வீட்டுக்கு எடுத்துச்சென்ற வழக்கு ஆவணங்கள் மாயம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

நீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.மதிவாணன். இவர் நீதிபதியாக பதவியில் இருந்தபோது, விசாரித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் குறித்து தலைமை நீதிபதியிடம் புகார் செய்யப்பட்டது. தலைமை நீதிபதியின் உத்தரவின்படி, உயர் நீதிமன்றப் பதிவுத்துறையும் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது, இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டதும் பின்னர் அது காணாமல் போனதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்குகளின் ஆவணங்களை இரு தரப்பினரிடம் இருந்து பெற்று, மறு கட்டமைப்பு செய்யும்படி உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மாயமான வழக்கு ஆவணங்களில் சில, வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. 
அப்போது, சி.பி.ஐ. தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் பல காணாமல் போயிருப்பது தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, 100-க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com