வசுமதி ராமசாமியின் நூற்றாண்டு விழா

எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் நூற்றாண்டு விழாவை சாகித்ய அகாதெமியும், எம். ஓ. பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இணைந்து பல்துறை பேச்சாளர்களைக் கொண்ட கருத்தரங்கமாக புதன்கிழமை நடத்தின.
வசுமதி ராமசாமியின் நூற்றாண்டு விழா

எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் நூற்றாண்டு விழாவை சாகித்ய அகாதெமியும், எம். ஓ. பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரியும் இணைந்து பல்துறை பேச்சாளர்களைக் கொண்ட கருத்தரங்கமாக புதன்கிழமை நடத்தின.
பெண் எழுத்தாளர் வசுமதி ராமசாமி, தமிழ் சமூகம் போற்றும் ஒப்பற்ற பெண்மணி. தினமணி கதிர், கல்கி போன்ற பல இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து அக்காலத்தில் வெளியிடப்பட்டன. காந்தியடிகளை நேரடியாக சந்தித்து, சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர்.
அவரது நூற்றாண்டு விழா, நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி.வைஷ்ணவ மகளிர் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சாகித்ய அகாதெமியின் தமிழ் குழு உறுப்பினர் மாலன் மற்றும் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.
அவர்களை தொடர்ந்து பேராசிரியர்கள் பிரேமா, பத்மினி, வைகை செல்வி, ராஜலட்சுமி மற்றும் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் வசுமதி ராமசாமியின் ஆளுமை, புதினங்கள், வாழ்க்கை வரலாறு, கடித இலக்கியங்கள் பற்றி பேருரை ஆற்றினர். கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் த. வாசுகி நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் வசுமதி ராமசாமியின் மகள் சுகந்தா சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com