ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் சேர மீண்டும் தகுதித் தேர்வு: சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தகவல்

கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இரண்டாவது முறையாக ஆர்க்கிடெக்சர்

கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இரண்டாவது முறையாக ஆர்க்கிடெக்சர் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்த அரசாணை வெளியிட்டுள்ளது. 
பி.ஆர்க் என்ற ஆர்க்கிடெக்சர் 5 ஆண்டு படிப்பில் சேர மேலும் ஒரு கூடுதல் வாய்ப்பாக தமிழ்நாடு நாட்டா எனப்படும் தகுதித் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் நடத்தவிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட நாட்டா நுழைவுத் தேர்வின் விவரம் கிராமப்புற மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியாததால், நிறைய பேர் அதற்கு விண்ணப்பிக்கவில்லை. 
இதனை பின்பு தெரிந்து கொண்டதும் நிகழாண்டில் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர ஆர்வம் கொண்டவர்கள் தமிழகத்தில் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளை அணுகியதால் அந்த மாணவர்களுக்கும், சென்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் பொருட்டு தமிழக அரசிடம் முறையிட்டு, இந்த மறுவாய்ப்பை கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சங்கம் மாணவ, மாணவியர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்தத் தேர்வு எழுத இணையதளம் வாயிலாகவும், அருகிலுள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கான தேதி குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும். இந்தத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்கள் மற்றும் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேரலாம். 
தற்போது நடைபெறவுள்ள தமிழ்நாடு நாட்டா தகுதித் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கோவை அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளில் முன்னுரிமையுடன் மாணவ, மாணவிகளைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com