கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் டி.ஜெயக்குமார்

"தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அதிமுக முடிவு மேற்கொள்ளும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

"தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அதிமுக முடிவு மேற்கொள்ளும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
 இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்தது. ஆனால், அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கவில்லை. ஆந்திர மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கியக் கோரிக்கையாக இருந்தது. நாட்டில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் சம அந்தஸ்தில் இருக்கும்போது, இதுபோன்ற தனி அந்தஸ்து கோரிக்கையை ஜெயலலிதா 2014-ஆம் ஆண்டே கடுமையாக எதிர்த்தார். அதே நிலையைத்தான் தற்போதும் அதிமுக எடுத்துள்ளது.
 மத்திய அரசின் திட்டங்களில் எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம். ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேட்கிறீர்கள். நாளுக்கு நாள் சூழல் மாறி வருகிறது.
 எனவே, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து கட்சி சரியான முடிவை மேற்கொள்ளும். மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். இந்த இணக்கத்துக்கும் பாஜகவுடான உறவுக்கும் வேறுபாடு உள்ளது என்றார் ஜெயக்குமார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com