திருச்சி- காரைக்கால் மின்மயமாக்கும் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும்

திருச்சி- காரைக்கால் ரயில் போக்குவரத்தை மின்மயமாக்கும் பணிகள் நிகழாண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் காரைக்காலில் சனிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி- காரைக்கால் மின்மயமாக்கும் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும்

திருச்சி- காரைக்கால் ரயில் போக்குவரத்தை மின்மயமாக்கும் பணிகள் நிகழாண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் காரைக்காலில் சனிக்கிழமை தெரிவித்தார்.
 தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா திருச்சி முதல் காரைக்கால் வரை நடைபெறும் ரயில்வே மின்மயாக்கும் பணியை பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட்டுவந்தார். காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அவர், நாகை மாவட்டம், தரங்கம்பாடிக்கு சென்று இரவு தங்கினார்.
 பின்னர், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 திருச்சி முதல் காரைக்கால் வரையிலான ரயில் போக்குவரத்து மின்மயமாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. நிகழாண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்தப் பணிகளும் நிறைவடைந்துவிடும்.
 நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் ரயிலின் வேகத்தை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான வசதிகள் செய்யப்படும். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக ரயில் இயக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது என்றார்.
 காரைக்கால் மாவட்ட நிர்வாகம், காரைக்கால் ரயில் நிலையத்துக்குத் தேவையான தண்ணீர் தராததால், காரைக்காலில் ரயில் சேவை நிறுத்தப்படும் என திருச்சி கோட்ட மேலாளர் கூறிய பிரச்னை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, திருச்சி கோட்ட மேலாளர் பேசிய பின்னர் இந்தப் பிரச்னை தீர்வு ஏற்பட்டுவிட்டது. அரசின் உத்தரவின்பேரில் காரைக்கால் நிர்வாகம் தண்ணீர் வழங்கிவருகிறது என்றார்.
 பேட்டியின்போது, திருச்சி கோட்ட மேலாளர் பி. உதயகுமார்ரெட்டி உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com