சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை: ஆக. 4-இல் சிறப்புக் கூட்டம்

சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து சலுகைகளை அளிப்பதற்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஜிஎஸ்டி அமைப்பின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை: ஆக. 4-இல் சிறப்புக் கூட்டம்

சிறு, குறு தொழில்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து சலுகைகளை அளிப்பதற்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஜிஎஸ்டி அமைப்பின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி: ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு இதுவரை மொத்தம் 457 பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு மற்றும் வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
 இதில், தமிழகம் முன் வைத்த கோரிக்கைகளின்படி, 67 பொருள்களுக்கு வரி விலக்கும், குறைப்பும் செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்ற 28-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் 50 பொருள்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டன. இதில் இந்தியா முழுவதும் வைக்கப்பட்ட கோரிக்கையின்படி சானிடரி நாப்கினுக்கும் 18 சதவீதத்திலிருந்து முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தின் சார்பில் மேலும் 45 பொருள்களுக்கு வரி குறைப்பு செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து ஆலோசிப்பதாகக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம். அது ஏற்கப்பட்டு, சிறு, குறு தொழில் புரிவோரிடம் இருந்து ஜூலை 29-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் பெற்று, அனுப்பி வைக்க வேண்டும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் சிறு, குறு தொழில்புரிவோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றை ஜிஎஸ்டி அமைப்புக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அமைப்பின் சிறப்புக் கூட்டம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இது சிறு,குறு தொழில் புரிவோரின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காகவே நடைபெறும் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com