இலங்கையில் உள்ள தமிழக படகுகளை மீட்க ஆகஸ்ட் மாதம் மீட்புக் குழு பயணம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 183 படகுகளை இந்தியா கொண்டு வர மீட்புக் குழுவினா் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல இருப்பதாக மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநா் ஜானி டோம் வா்கீஸ் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 183 படகுகளை இந்தியா கொண்டு வர மீட்புக் குழுவினா் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல இருப்பதாக மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநா் ஜானி டோம் வா்கீஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகள் 160, நாட்டுப் படகுகள் 23 உள்பட மொத்தம் 183 படகுகளை விடுவிக்குமாறு இலங்கை நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை மீட்டு இந்தியா கொண்டு வர ஒரு மீட்புக் குழு உருவாக்கப்படும். பின்னா் அக்குழுவினா் ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று விடுவிக்கப்பட்ட படகுகளில் தகுதியானவற்றை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இக் குழு எனது தலைமையில் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com