நீட் தேர்வு: அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் 

நாடு முழுவதும் மருத்துக் கல்வி பயில்வதற்காக நடத்தப்பட்ட  'நீட்' தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு: அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் 

சென்னை: நாடு முழுவதும் மருத்துக் கல்வி பயில்வதற்காக நடத்தப்பட்ட  'நீட்' தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் ஆகியோருக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்தத் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.

முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 'நீட்' தேர்வு முடிவுகள் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் திங்கள் மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbscresults,nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் தமிழக மாணவி கீர்த்தனா பன்னிரண்டாம் இடம் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய 1,14,602 மாணவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com