சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சத்தியமூர்த்தி 1991-1996-ஆம் ஆண்டு வணிக வரித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் அப்போது வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த குற்றச்சாட்டின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (புதன்கிழமை) இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருடைய மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இதே வழக்கில் கீழ் நீதிமன்றம் சத்தியமூர்த்தியை விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com