காலாவுக்காக கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த்... நாளை ரிலீஸ் ஆகுமா?

காவிரி விவகாரத்துக்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசு அமைந்தாலும் அதனை அமல்படுத்தவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மறுப்பு தெரிவித்தது. காலா திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால், இதுவரை காலா படம் வெளியாவது உறுதியாகவில்லை. 

காலா குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் ரஜினி கூறுகையில், காலா படத்துக்கான எதிர்ப்பு குறைவு தான். இதைவிட அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்று கூறினார். 

இதையடுத்து, கர்நாடகத்தில் காலா படத்தை வெளியிடுமாறும், பாதுகாப்பு அளிக்குமாறும் தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கில், காலா படத்தை வெளியிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. அதே சமயம், காலா படம் வெளியானால் திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. 

கர்நாடக முதல்வர், உயர்நீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்றும் அதனால் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதேசமயம் அவர் காவிரி நதீநீர் பிரச்சனை தீரும் வகை காலா வெளியாவது சரியானதல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும் குமாரசாமி தெரிவித்தார். 

இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

"கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்று நம்புகிறேன்.

போராட்டம் நடத்து கன்னட அமைப்புகள் என்னை நேரில் சந்திக்கலாம். காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்கு என்று வெளியிடவில்லை. உலகம் முழுவதும் வெளியிடுகிறோம்.   

கன்னட திரைப்பட வர்த்தகமே காலாவை வெளியிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. திரைப்படத்தை பிரச்னை இல்லாமல் வெளியிடுவது தான் திரைப்பட வர்த்தக சபையின் வேலை. வர்த்தக சபையே காலாவுக்கு தடை விதிப்பது சரியல்ல" என்றார். 

பின்னர், இந்த பேட்டியின் போது அவர் கடைசியில் கன்னட மக்களுக்காக கன்னட மொழியில் பேசினார். 

அதனால், நாளை காலா வெளியாவதற்கு இந்த பேட்டி உதவுமா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com