விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம்  கற்றுக் கொள்ளலாம்: இயக்குநர் அமீர் சுளீர் 

விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம்  கற்றுக் கொள்ளலாம்: இயக்குநர் அமீர் சுளீர் 

அரியலூர்: விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அடுத்த தினமே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு சார்பில் அமைச்சர்கள் 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகு நேரில் சென்று ஆறுதல் அளித்தனர். 

அண்மையில், ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு நேரில் சென்று அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில் நடிகர் விஜய் செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினார்.

அவர், பகல் நேரத்தில் சென்றால் ரசிகர்களின் கூட்டம் கூடும் என்பதால் பெரிதளவு தகவல் தெரிவிக்காமல் இரவு நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதையடுத்து, இன்று அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இயக்குநர் அமீர் புதன் காலை அரியலூர் வந்திருந்தார். அப்போது அவருடன் நடிகர் விஜய்யின் தூத்துக்குடி பயணம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

பிரச்னைக்குளான இடத்திற்கு எவ்வாறு சென்று சர்ச்சை எதுவும் இன்றி பார்வையிட்டு திரும்புவது என்பது குறித்து, விஜய்யிடம் இருந்து ரஜினி பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com