வேல்முருகன் ஜாமீன் மனு: உளுந்தூர்பேட்டை, நெய்வேலி போலீசார் பதிலளிக்க உத்தரவு 

வேல்முருகன் ஜாமீன் மனு மீது உளுந்தூர்பேட்டை, நெய்வேலி போலீஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வேல்முருகன் ஜாமீன் மனு: உளுந்தூர்பேட்டை, நெய்வேலி போலீசார் பதிலளிக்க உத்தரவு 

வேல்முருகன் ஜாமீன் மனு மீது உளுந்தூர்பேட்டை, நெய்வேலி போலீஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடந்த 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி, வேல்முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை, நெய்வேலி போலீஸ் வரும் 18ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com