திருவண்ணாமலை - தருமபுரி மாவட்ட எல்லையான நீப்பத்துறை கிராமத்தில் அதிநவீன கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவன ஊழியர்கள் குழு.
திருவண்ணாமலை - தருமபுரி மாவட்ட எல்லையான நீப்பத்துறை கிராமத்தில் அதிநவீன கருவி மூலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவன ஊழியர்கள் குழு.

சேலம் -சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்

சேலம் -சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் பசுமை வழிச்சாலைக்கான அளவீடு செய்யும் பணிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.

சேலம் -சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் பசுமை வழிச்சாலைக்கான அளவீடு செய்யும் பணிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.
சேலம் -சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய பசுமை வழிச்சாலை அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. சென்னை தாம்பரத்தில் தொடங்கும் இந்தச் சாலைக்கு தருமபுரி மாவட்டம், அரூர் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 179ஆ என்றும், அரூர் முதல் சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 179அ என்று பெயரிடப்படுகிறது.
5 மாவட்டங்களில்: இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ. தொலைவுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் வரை 122 கி.மீ. தொலைவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ. தொலைவுக்கும், தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வரை 53 கி.மீ. தொலைவுக்கும், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து சேலம் வரை 38 கி.மீ. தொலைவுக்கும் அமைகிறது.
60 கி.மீ. தொலைவு குறையும்: தற்போது சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் வரை 360 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய பசுமை வழிச்சாலை மூலம் சேலம் - சென்னை இடையிலான தொலைவு 60 கி.மீ. வரை குறையும். பயண நேரமும் குறையும் என்று கூறப்படுகிறது.
அளவீடு பணி தொடக்கம்: 5 மாவட்டங்கள் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான தொலைவு அமைவது திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் (122 கிலோ மீட்டர்). இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை அமையும் இடங்களை அதிநவீன கருவி மூலம் அளவீடு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருவண்ணாமலை - தருமபுரி மாவட்ட எல்லையான நீப்பத்துறை கிராமம், நீப்பத்துரை நகரப்பட்டி, கட்டமடுவு உள்ளிட்ட கிராமங்களில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சாலை அளவீடு செய்யும் பணியை ஏராளமான கிராம மக்கள் ஆர்முடன் பார்த்தனர்.
கூகுள் வரைபட உதவியுடன்: ஏற்கெனவே கூகுள் தேடுபொறியில் உள்ள வரைபட உதவியுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் எத்தனை கி.மீ. தொலைவுக்கு சாலை அமைப்பது என்பதை வல்லுநர் குழு அளவீடு செய்து வைத்துள்ளது. இந்த அளவுகளின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரில் அளவீடு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com