திருவண்ணாமலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலையில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலையில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, திமுக உறுப்பினர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: திருவண்ணாமலை மாவட்டத்துக்கென தனியாக மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை.
எ.வ.வேலு: திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பாலை சென்னைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்படுகின்றன. 
இதனால், பாலை உரிய காலத்தில் கொண்டு சேர்க்க முடிவதில்லை. அம்மாபாளையத்தில் 2 லட்சம் லிட்டர் பாலை, பால் பவுடராக உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. மாவட்ட விவசாயிகளுக்கு உபதொழிலாக பால் உற்பத்தி இருந்து வருகிறது. எனவே, அங்கு கூட்டுறவு ஒன்றியம் அமைப்பது அவசியம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வேலூர் -திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தைப் பிரித்து, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தனியாக ஒரு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க முதல்வரின் ஆலோசனையைப் பெற்று பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. வேலூர் -திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் தினமும் 3.44 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களைப் பிரிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, விரைவில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com