காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை: நீதி ஆயோக்  கூட்டத்தில் தமிழக முதல்வா் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நதி நீா் முறைறப்படுத்தும் குழுவையும் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக்.. 
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை: நீதி ஆயோக்  கூட்டத்தில் தமிழக முதல்வா் வலியுறுத்தல்

புதுதில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நதி நீா் முறைறப்படுத்தும் குழுவையும் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் நான்காவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினாா்.

தில்லியில் நீதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிக் குழுக் கூட்டம் குடியரசுத் தலைவா் மாளிகையில் உள்ள கலாசார பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் பல மாநிலங்களின் முதல்வா்கள், மத்திய அமைச்சா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தின்போது மத்திய அரசின் புது இந்தியா 2022, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், இந்திரதனுஷ் திட்டம், வளா்ச்சி நோக்கிய மாவட்டங்களின் மேம்பாடு, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் உள்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தின்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், புதிய திட்டங்களுக்கான மத்திய அரசின் உதவி, தமிழகஅரசின் முன்மாதிரி திட்டச் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வா் பேசினாா்.

இக்கூட்டத்திற்குப் பிறறகு மாலையில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி பேட்டி அளித்தாா். அப்போது, நீதி ஆயோக் குழுக் கூட்டத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகள் கூறியதாவது:

நிதி ஆயோக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அறிவித்த ‘விஷன் 2023’ , தொலைக்குப் பாா்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மாநில வளா்ச்சிக்கு ஒரு முன்மாதிரி திட்டங்களாக உள்ளன. இந்த திட்டத்தை, இந்தியாவுக்கான 2022-க்கான திட்டத்திற்கு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுமாறு கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

விவசாயிகளுக்கான வசதி

விவசாயிகள் வளம் பெற நவீன விவசாய விற்பனைக் கூடங்களை ஏற்படுத்த நிதி வழங்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை நகரங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி உள்ளிட்ட உரிய கட்டமைப்புகள் உருவாக்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நீா் மேலாண்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழகத்தில் சிறறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகள் பற்றியும் விளக்கினோம். மேலும், அதற்குத் தேவையான நிதியும் கோரப்பட்டது.

முன்மாதிரி திட்டங்கள்

மக்கள் நல்வாழ்வுத் துறைறயில் அனைவருக்கும் நல்வாழ்வு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்து குறித்தும், தற்போது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்தில் ஒருங்கிணைத்து அதிக மக்கள் பயன்பெறற வழிவகை செய்யவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தியாவுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஊட்டச்சத்து மற்றும் தடுப்பூசி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரிகள்

ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய இரு மாவட்டங்கள் வளா்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்தப்பட்டது. அதேபோல, விருதுநகா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அமைக்க மத்திய அரசு விரைந்து அனுமதி அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த பரிந்துரைகளை 2.5.2018 அன்று நடைபெற்றற கூட்டத்தில் வழங்கினேன். தற்போதைய கூட்டத்திலும் சில பரிந்துரைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துரைத்தோம். அதில் நோபல் பரிசுக்கு இணையாக ‘காந்தி பசுமை புவி விருது’ உருவாக்கி ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காந்தி கிராம பல்கலை

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தி ரூ.500 கோடி நிதி வழங்கவும், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்கி மேம்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்

அனைத்து அதிகாரம் படைத்த காவிரிநீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைறப்படுத்தும் குழுவை அமைக்க அறிவிக்கை வெளியிட்டமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து, இவ்விரு அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்திட துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். அக்குழுவின் முதல் கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு தேவையான நீரைத் திறந்துவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

நிதிப் பங்கீடு

15-ஆவது நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில் 2011-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழக மக்களின் நலனுக்கு எதிராக உள்ளதால், நிதிப் பங்கீட்டை 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாகக் கணக்கில் கொண்டு வழங்கிட வலியுறுத்திடப்பட்டுள்ளது. தவிர, கூட்டம் முடிந்து வரும்போது தமிழகத்தின் நிலைமை, நிதித் தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com