ஆண்டிப்பட்டியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் போட்டி இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் போட்டியிட மாட்டேன் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். 
ஆண்டிப்பட்டியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் போட்டி இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் போட்டியிட மாட்டேன் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். 
இதுதொடர்பாக தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மீது ஏற்பட்ட அதிருப்தியால்தான் வழக்கை வாபஸ் பெறும் முடிவை எடுத்துள்ளேன். எந்த தவறும் செய்யாத எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மத்திய, மாநில அரசின் சொல்படிதான் செயல்படுகின்றன. 
ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தி, எம்எல்ஏவை தேர்வு செய்யுங்கள். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் மனம் திருந்தி வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களின் பிரச்னைகளை தீர்க்க, விரைவில் இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்வு செய்ய வேண்டும். நான் மீண்டும் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. இந்த ஆட்சியில் நான் எம்எல்ஏவாக ஆகி, எந்த காரியமும் சாதிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com