பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: கைதான கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: கைதான கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித உதவிப் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். 

இவ் வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலாதேவி கொடுத்த தகவலின் பேரில்,  மதுரை ஒத்தக்கடை, திருமோகூர், சக்ராநகரைச் சேர்ந்த, மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன் (42), திருச்சுழி, பன்னிமடையைச் சேர்ந்த, பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இவ்வழக்கில் கருப்பசாமியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவி விவகாரத்தில் கருப்பசாமிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி தாக்கல் செய்த பதில்மனுவுக்கு விளக்கம் தர கருப்பசாமி தரப்பு அவகாசம் கோரியதால் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com