உதவி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜூலை 5 வரை காவல் நீட்டிப்பு

நிர்மலா தேவியை ஜூலை 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி வியாழக்கிழமை உத்தரவிட்டார். 
உதவி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜூலை 5 வரை காவல் நீட்டிப்பு

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட உதவி பேராசிரியை நிர்மலா தேவியை ஜூலை 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரியில் கணித துறையில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவா் நிர்மலாதேவி. இவா், தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து அவரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்ட னா். அதன் அடிப்படையில், மதுரா காமராஜா் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிந்த முருகன், முன்னாள் ஆா்ய்ச்சி மாணவா் கருப்பசாமி கைது செய்யப்பட்டனா். 

இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவியை விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 2 இல் போலீஸார், வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். விசாரணையின் அடிப்படையில் நிர்மலா தேவியை ஜூலை 5-இல் மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com