தமிழகத்தில் அமையப் போகும் எய்ம்ஸ்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசு 

தமிழகத்தில் அமையப் போகும் எய்ம்ஸ்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசு 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை, தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஜூன் 19-ஆம் தேதி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் முதல்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஐந்து நிபந்தனைகளையும் தெரிவித்திருந்தது. அந்த நிபந்தனைகளை விரைவாக நிறைறவேற்றி மத்திய அரசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் துரிதப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் இறங்கியுள்ளனா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை சென்னையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கர், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது நாம் எதிா்பாா்த்த ஒன்று. எனவே போா்க்கால அடிப்படையில் அதன் பணிகள் தொடங்கும். மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 1,500 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்தில் தமிழக முதல்வா் பிரதமரை வலியுறுத்தி வெற்றியைப் பெற்றுள்ளாா் என்றறாா் அவா்.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, அதன் இடம் பெறும் வசதிகள், துறைறகள், ஆய்வுப் பிரிவுகள், கட்டுமானம் உள்ளிட்டவை குறித்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் மத்திய சுகாதாரத் துறைற ஈடுபட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் விரைவில் மருத்துவமனை அமையும். இது ரூ.1000 கோடிக்கும் அதிகமான திட்டம் என்பதால், திட்ட அறிக்கையைத் தயாரித்த பின்னா் மத்திய அமைச்சரவை கூடி இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கிடையில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிபந்தனைகளைச் செயல்படுத்துமாறு சுகாதாரத்துறையின் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தோப்பூரில் மருத்துவமனைக்கான ஆரம்ப கட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மதுரை விரைகின்றனா்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com