கார் சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

கார் சாகுபடிக்காக கடனாநதி மற்றும் ராமநதி அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 4995 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
கார் சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு


அம்பாசமுத்திரம்: கார் சாகுபடிக்காக கடனாநதி மற்றும் ராமநதி அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 4995 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை மே 29இல் தொடங்கியதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

இதையடுத்து கார் சாகுபடிக்காக அணைகளி­லிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கடனாநதி மற்றும் ராமநதி அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

ராமநதி அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமை வகித்து தண்ணீர் திறந்துவிட்டார். இதையடுத்து ராமநதி அணையிலிருந்து ஜூன் 22 முதல் அக்டோபர் 24 வரை 125 நாள்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் தேவைக்கேற்ப நீர் இருப்பைப் பொறுத்து 168.03 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதன் மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், ஆடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்குள்பட்ட சுமார் 1008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 

அணையைத் திறந்து வைத்து அமைச்சர் ராஜலெட்சுமி கூறும்போது, அணையிலிருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். அணையை தூர்வார உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com