கீழடி ஆய்வுகள் பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தும்: டி.கே.ரங்கராஜன் எம்.பி.

கீழடி அகழாய்வுகள் பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.
புதுச்சேரி செயராம் திருமண நிலையத்தில் கீழடி அகழாய்வுக் கண்காட்சியை வியாழக்கிழமை திறந்துவைத்து பார்வையிடுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.
புதுச்சேரி செயராம் திருமண நிலையத்தில் கீழடி அகழாய்வுக் கண்காட்சியை வியாழக்கிழமை திறந்துவைத்து பார்வையிடுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.

கீழடி அகழாய்வுகள் பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாட்டையொட்டி, புதுச்சேரி செயராம் திருமண நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழடி வரலாற்றுக் கண்காட்சியைத் திறந்துவைத்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசியதாவது:
கீழடி அகழாய்வு நான்காம் கட்டத்தில் உள்ளது. இன்னும் பல கட்ட ஆய்வுகள் உள்ளன. கீழடி ஆய்வு தொடர்புக்கு எழுத்தாளர்கள் பங்கே முக்கியக் காரணம். கீழடி அகழாய்வு பல உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும். புதிய வரலாற்றை பதிவு செய்யும் என்றார் அவர்.
முன்னதாக, எழுத்தாளர்கள், கலைஞர்களின் பேரணி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர் சு.வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் பெருமாள், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமா நூற்றாண்டு கண்காட்சியை திரைப்பட கலைஞர் லெனினும், புத்தகக் கண்காட்சியை எழுத்தாளர் ரவிக்குமாரும், புதுவை இளவேனில் புகைப்படக் கண்காட்சியை பஞ்சாங்கமும் தொடங்கிவைத்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் மேள இசைக்கு திரைப்பட கலைஞர் லெனின், பிரளயன் உள்ளிட்டோர் நடனமாடினர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை காலை பாரதியார் சுடர், பாரதிதாசன் சுடர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சுடர், தமிழ் ஒளி சுடர், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுச் சுடர் ஏந்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இதில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், ச.தமிழ்ச்செல்வம், ஜாவேத் அக்தர், கி.ராஜநாராயணன், இரா.காமராசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். 
இந்த மாநாடு வருகிற 24-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com