குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க விரும்பியதில்லை: ஸ்டாலின்

ஒரு காலத்திலும் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக விரும்பியதில்லை என்றார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஒரு காலத்திலும் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக விரும்பியதில்லை என்றார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக சிறுபான்மை நலஉரிமைப் பிரிவின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுகதான்.
திமுக நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய ஆட்சியை கலைத்திருக்க முடியும் என பலர் பேசுகின்றனர். கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இந்த ஆட்சிக்கு எப்போதோ முடிவு கட்டியிருப்பார் என பலர் கூறுகின்றனர். பாமர மக்கள் மட்டுமல்ல , படித்தவர்களும்தான் அதைதான் பேசுகின்றனர்.
எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் தற்போது பதவி போய்விடும் என்பதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமைதிகாக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவர் மீதும் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
மற்றவர்கள் கூறுவது போல, ஆட்சி கவிழ்ப்புக்காக நாம் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினால், அதைத் தொடர்ந்து ஆட்சிஅமைத்தால், நாமும் மாமூல் தர வேண்டிய கட்டாயத் தேவை ஏற்படும். ஆனால், அதற்குப் பின்னர் இந்த கட்சி, இயக்கம் இருக்குமா, மக்கள் நம்மை எப்படி மதிப்பார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
நாம் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும். பதவி வரும் போகும். மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை வழங்குவார்கள். திமுக ஒரு காலத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க விரும்பியதில்லை என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com