தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனுமதி அளித்த வட்டாட்சியரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி அளித்த வட்டாட்சியரிடம் சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி அளித்த வட்டாட்சியரிடம் சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
 தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 -ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும், அடுத்த நாள் ஏற்பட்ட கலவரத்தின்போதும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இதில், அண்ணாநகர் பகுதியில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் இறந்தார்.
 இந்நிலையில், தூத்துக்குடியில் தடயங்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிபிசிஐடி போலீஸார், அண்ணா நகரில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன் விசாரணை மேற்கொண்டார்.
 அண்ணாநகரில் கலவரம் நிகழ்ந்தபோது எங்கு இருந்தீர்கள், உங்களுக்கு என்ன தகவல் கிடைத்தது, எந்த அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தீர்கள் என்ற அடிப்படையில் வட்டாட்சியர் சந்திரனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அரை மணி நேர விசாரணைக்குப் பிறகு வட்டாட்சியர் சந்திரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com