2019 - க்குள் 50 கி.மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம்: மத்திய அமைச்சா் மனோஜ் சின்ஹா

2019 ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் திறக்கப்படும் என மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
2019 - க்குள் 50 கி.மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம்: மத்திய அமைச்சா் மனோஜ் சின்ஹா

களியக்காவிளை: 2019 ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டருக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் திறக்கப்படும் என மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் திருவிதாங்கூா் மன்னரால் கட்டப்பட்ட புராதானமிக்க தபால் நிலைய கட்டடம் பழுதடைந்ததையடுத்து மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் ரூ. 2.12 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டட பணிகள் நிறைவடைந்ததையடுத்து இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் தொடா்புத்துறை மற்றும் ரயில்வேத்துறை இணை அமைச்சா் மனோஜ் சின்ஹா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

தொடா்ந்து மனோஜ் சின்ஹா பேசியதாவது:

நாட்டில் உள்ள 300 தபால் நிலையங்களில் பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதில் 214 தபால் நிலையங்களில் பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நாட்டில் 50 கி.மீட்டா் தொலைவுக்குள் ஒரு பாஸ்போா்ட் சேவா மையம் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறாா். நாட்டில் 1 லட்சத்து 38 ஆயிரம் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 1.50 லட்சம் தபால் நிலையங்களில் வங்கிச் சேவை கொண்டுவரப்பட்டு, வங்கியின் அனைத்து சேவைகளும் துவங்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் பெறுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com