இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும்: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பேச்சு! 

மக்களின் தேவைகளை நிறைவேற்றாத இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும் என்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும் பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும்: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பேச்சு! 

சென்னை: மக்களின் தேவைகளை நிறைவேற்றாத இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும் என்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசும் பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் திங்களன்று கட்சியில் சேர   பல்வேறு கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர். அப்பொழுது  கல்லூரி மாணவர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் கமல் பேசினார். அப்பொழுது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து கமல் பேசியதாவது:

தமிழக அரசு தற்பொழுது இலவச ஸ்கூட்டர் வழங்கி வருகிறது. ஆனால் அது தேவை இல்லை. மக்கள் வேலை இல்லாமல் அலைந்துகொன்டு இருக்கும் பொழுது ஸ்கூட்டர் எதற்கு? நான் உங்களுக்கு ஸ்கூட்டர் வழங்க  மாட்டேன். ஆனால் நீங்களே வாங்கும் நிலையை உருவாக்குவேன் 

இலவசத்துக்கு நிற்கும் இந்த அவலமானது உங்கள் தலைமுறையோடு போகட்டும். அடுத்த தலைமுறைக்கு வேண்டாம்.

மக்களின் தேவைகள் என்ன என்று பார்த்து நிறைவேற்றாத இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும்.

நானும் முதலில் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் சேராமல் இருந்தால் அது தவறு என்று உணர்ந்து சேர்ந்து விட்டேன். அரசியலை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம்.

அரசியலில் தலைவராக மாற விரும்பும் உங்களை போன்ற மாணவர்கள் முதலில் தொண்டு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

நமது கடமைகளை உணர்ந்து முதலில் வரிகள் கட்ட வேண்டும். பின்னர் கேள்விகள் கேட்போம். நான் அரசியலில் நுழைந்தது போன்று, மாணவர்களும் அரசியலில் நுழைய வேண்டும்.

அரசு செய்ய வேண்டிய கல்வி சேவையை தனியாரும், தனியார் வசம் இருக்க வேண்டிய மது விற்பனையை அரசும் செய்து வரும் அவலம் இங்குதான் நிகழ்ந்து வருகிறது. மது விற்பனைக்கு தடை விதித்தால் கண்டிப்பாக கள்ளச்சாராயம் பெருகும். மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது.

யார் வீழ்ந்தாலும் சரி கண்டிப்பாக தமிழகம் வாழும்; எழும்.  

இவ்வாறு  கமல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com