தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத்தீ: சிக்கியுள்ள 40 மாணவிகளை மீட்க வனத்துறை  தீவிர முயற்சி!

தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டுள்ள 40 கல்லூரி மாணவிகளை மீட்க வனத்துறை  தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத்தீ: சிக்கியுள்ள 40 மாணவிகளை மீட்க வனத்துறை  தீவிர முயற்சி!

போடி: தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டுள்ள 40 கல்லூரி மாணவிகளை மீட்க வனத்துறை  தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது குரங்கணி மலை. கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 40 பேர் இங்கு மலையேறும் பயிற்சிக்காக வந்திருந்தனர்.

அவர்கள் ஞாயிறன்று மலை ஏறுவதற்காக குரங்கணி மலையில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். அவர்கள் உள்ளே சென்ற பின்னர் எதிர்பாராத விதமாக திடீர் என்று காட்டுத்தீ பிடித்துக் கொண்டது.

இதனால் அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து கீழே சமவெளிப்பகுதிக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிக்கிக் கொண்டுள்ள 40 மாணவிகளை காப்பற்றுவதற்காக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் ஊர்மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தகவல் கேள்விப்பட்ட உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அங்கு விரைந்துளார்.

அத்துடன் மாவட்டம் முழுவதும் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் காட்டுத்தீ தொடர்ந்து வருவதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com