ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டியதில் ஒருவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தாண்றீஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தாண்றீஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
தாண்றீஸ்வரம் சத்ருசம்கார மூர்த்தி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. 
திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 658 காளைகளும், 180 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
காளை முட்டியதில் இலுப்பூர் அருகே குவாட்டுப்பட்டியைச் சேர்ந்த நடேசன் மகன் முத்து(25) காயமடைந்து உயிரிழந்தார். 
மாடுபிடி வீரர்கள் முருகேசன், வெள்ளைச்சாமி, யோகேஸ், பிரகாஸ், பார்வையாளர்கள் அழகர், ராமச்சந்திரன், ராம்கி, விஜய் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தனியார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com