தமிழக கடற்கரை சுற்றுலாத் தல மேம்பாட்டுக்கு ரூ.99.92 கோடி ஒதுக்கீடு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் கடற்கரை சர்க்யூட்டில் 2016-17 நிதியாண்டில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்காக ரூ.99.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. 

தமிழகத்தில் கடற்கரை சர்க்யூட்டில் 2016-17 நிதியாண்டில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்காக ரூ.99.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. 
இதுதொடர்பாக மக்களவையில் திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனி) கே.ஜே. அல்போன்ஸ் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்: 
உள்நாட்டு சுற்றுலா மையங்கள் மற்றும் திருத்தலங்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டம் வாயிலாக 67 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க, பாரம்பரியமிக்க ஆன்மிகத் திருத்தலங்கள் மாநிலம் வாரியாகத் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் சுற்றுலா கட்டமைப்புகளை உலகத் தரம் வாய்ந்த வகையில் மாற்றவும் மேம்படுத்தவும், புணரமைக்கவும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் கடற்கரை சுற்றுலா சர்க்யூட் மேம்பாட்டுக்காக 2015-16-இல் ரூ.85.28 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.38.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
2017-18 -இல் புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 66.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.13.27 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
அதே நேரத்தில் ஆன்மிக சுற்றுலா சர்க்யூட்டில் ரூ.40.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.8.14 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் கடற்கரை சர்க்யூட்டில் 2016-17 நிதியாண்டில் சென்னை - மகாபலிபுரம் - ராமேசுவரம் - க ன்னியாகுமரி சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டுக்கு ரூ.99.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.19.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
காஞ்சிபுரம் சுற்றுலா கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 16.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.3.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
வேளாங்கண்ணி சுற்றுலாத் தல மேம்பாட்டுக்கு ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1.12 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com