தமிழிணைய மென்பொருள் மூன்றாம் தொகுப்பு வெளியீடு

தமிழிணைய மென்பொருளின் மூன்றாம் தொகுப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

தமிழிணைய மென்பொருளின் மூன்றாம் தொகுப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழிணையம் -விவசாயத் தகவல் அமைப்பு, தொல்காப்பியத் தகவல், தமிழ்ப் பயிற்றுவி, நிகழாய்வி ஆகிய மென்பொருள்கள் அடங்கிய தமிழிணைய மென்பொருள் தொகுப்புகள் ஏற்கெனவே இரண்டு வெளியிடப்பட்டன. இந்த நிலையில், மூன்றாவது தொகுப்பினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பில், தமிழிணையம்-பிழைத் திருத்தி, அகராதி தொகுப்பு, கருத்துக்களவு ஆய்வி, சொற்றொடர் தொகுப்பு, தரவு பகுப்பாய்தல் ஆகிய மென்பொருள்கள் அடங்கியுள்ளன.
இந்தத் தொகுப்பானது, தட்டச்சர்கள், தமிழ் நூல்களை வடிவமைப்போர், நூல் வெளியீட்டாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும். கணினியில் தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும்போது ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து அவற்றை திருத்தம் செய்தல், தமிழ் சொல்லுக்கு தமிழ் அகரமுதலி, தமிழ் லெக்சிகன், கதிர்வேலு பிள்ளை அகராதி போன்ற அதிகராதிகளில் உள்ள பொருள் அறிதல், கருத்துகளவினை கண்டறிதல், தமிழ் தளங்களில் உள்ள சொற்றொடர்களைத் தொகுத்தல், தமிழ் சொற்களை அவற்றின் சொல் எண்ணிக்கை, வகைப்படுத்தல் மற்றும் முன்பின் சொற்களை கண்டறிந்து பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் தொகுப்பினை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் தேவையான விவரங்களைப் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்தப் புதிய மென்பொருள் தொகுப்பு தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com