பெண் கல்வி விழுக்காடு அதிகரிக்க வேண்டும்: இரோம் சர்மிளா

அனைத்து நிலைகளிலும் பெண்கள் மேம்பாடு பெற வேண்டுமெனில் பெண் கல்வி விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என மணிப்பூர் போராளியும், சமூக ஆர்வலருமான இரோம் சர்மிளா வலியுறுத்தினார்.
பெண் கல்வி விழுக்காடு அதிகரிக்க வேண்டும்: இரோம் சர்மிளா

அனைத்து நிலைகளிலும் பெண்கள் மேம்பாடு பெற வேண்டுமெனில் பெண் கல்வி விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என மணிப்பூர் போராளியும், சமூக ஆர்வலருமான இரோம் சர்மிளா வலியுறுத்தினார்.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அவர் பேசியது: இந்திய அளவில் பெண் கல்வி விகிதம் 65.5 விழுக்காடாக உள்ளது. தமிழகத்தில் 73.9 விழுக்காடு உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்த வேண்டும். பொதுவாழ்க்கையில் பெண்கள் அதிகம் பங்கு கொள்ள வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் கடுமையான பணிகளில் செயல்படுவது சிரமம். எனவே, பெண்கள் ராணுவத்துக்கு செல்வதை நான் ஊக்குவிப்பதில்லை. ஆண், பெண் பாகுபாடு என்பது நமது கலாசாரத்தில் ஆதிகாலம் முதல் உள்ளது. இது முற்றிலும் களையப்பட வேண்டும். 
பெண்களுக்கு எதிரானத் தாக்குதல் என்பது மிருகத்தனமானது. மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்கொடுமைகளும், இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இனப் படுகொலைகளும் மனித குலத்துக்கு எதிரானவை. அநீதிக்கு எதிராகப் பெண்கள் ஒன்று திரளவேண்டும்.பெண்களின் கல்வித்தரம் உயர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு மேம்பாடு என்பது சாத்தியம். வலிமையால் எதையும் அடக்க முடியாது. அன்பினால் மட்டுமே அமைதி ஏற்படும். காலம் காலமாக பெண்கள் மீதான தாக்குதல் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ள பெண்கள் மனவலிமை மற்றும் உடல் வலிமையோடு போராட வேண்டும். தியாகத்தின் மறுஉருவம் பெண்கள். வலிமையின் மறு உருவமும் பெண்கள்தான். திறமையின் தனிவடிவம் நமது இளம்பெண்கள்.மணிப்பூர் குடிமகளாக இல்லாமல், உலகத்தின் குடிமகளாக இருக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
விழாவில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் உ. வாசுகி சிறப்புரையாற்றினார். தூய வளனார் கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ, செயலர் அந்தோனி பாப்புராஜ், முதல்வர் ஆன்ட்ரூ, துணை முதலவர் கே.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com