தனியார் நகைக் கடை உரிமையாளர் மீது ரூ.824 கோடி மோசடி செய்ததாக எஸ்பிஐ புகார்

தனியார் நகைக் கடை உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயின், ரூ.824 கோடி அளவுக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐயிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது.
தனியார் நகைக் கடை உரிமையாளர் மீது ரூ.824 கோடி மோசடி செய்ததாக எஸ்பிஐ புகார்


புது தில்லி: தனியார் நகைக் கடை உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயின், ரூ.824 கோடி அளவுக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐயிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது.

கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக தில்லியில் உள்ள சிபிஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கி எழுதியிருக்கும் 16 பக்க புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

போலியாக வங்கிக் கணக்குகளில் இருப்பு இருப்பதாக கணக்குக் காட்டி கனிஷ்க் நிறுவனம் சார்பில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் மட்டும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.175 கோடி அளவுக்குக் கடன் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல் மற்றும் வட்டியை கனிஷ்க் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. 

அந்த வகையில் சென்னையில் இயங்கும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளிடம் இருந்து ரூ.824 கோடியே 15 லட்ச ரூபாயை கடனாகப் பெற்று மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com