டெங்கு காய்ச்சல் குணமானாலும் கவனம் தேவை: பூச்சியியல் வல்லுநர் ராஜமாணிக்கம்

டெங்கு காய்ச்சல் குணமானாலும் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறையின் பூச்சியியல் வல்லுநர் ராஜமாணிக்கம் கூறினார்.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகிறார் பூச்சியியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.
டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகிறார் பூச்சியியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.

டெங்கு காய்ச்சல் குணமானாலும் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறையின் பூச்சியியல் வல்லுநர் ராஜமாணிக்கம் கூறினார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தினமணி-'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் பொது சுகாதாரத் துறைஇந்த நிகழ்ச்சியை நடத்தியது .
நிகழ்ச்சியில் ராஜமாணிக்கம் பேசியது: டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் பொதுவாக மூன்று வழிகளில் பரவுகிறது. வீட்டு உபயோகத்துக்காக சேமிக்கப்படும் தண்ணீரை திறந்து வைத்தல், வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேவையில்லாத பொருள்களைப் போட்டு வைப்பதால் அதில் தேங்கும் நீர், மரப்பொந்துகள், பாறைகளில் உள்ள குழிகளில் தேங்கும் நீர் ஆகிய வழிகளில் டெங்கு கொசுக்கள் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் முட்டையிட்டு புழுக்களாக மாறி, கொசுக்கள் உற்பத்தியாவதற்கு 8 முதல் 10 நாள்கள் ஆகும். எனவே, வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை வாரத்துக்கு ஒருமுறை மாற்றி விடுவது நல்லது.
டெங்குவை ஏற்படுத்துவது ஒரு வைரஸ், அதனைப் பரப்புவதுதான் ஏடிஎஸ் கொசுக்கள். டெங்குவை ஏற்படுத்தும் வைரஸை அழிப்பதற்கு தொழில்நுட்பங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எனவே, ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.
சுய மருத்துவம் கூடாது: காய்ச்சல் பாதித்தால் சுய மருத்துவம் அல்லது மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. போலி மருத்துவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உரிய மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். டெங்கு காய்ச்சல் குணமான பிறகுதான், சிலருக்கு ரத்தக்கசிவு ஏற்படும். எனவே, காய்ச்சல் குணமான பின்பும் கவனமாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குணமான பின்பு உணவு உட்கொள்வதில் பிரச்னை இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com