காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவேயில்லை: தமிழிசை

காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை கூறியுள்ளார்.
காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவேயில்லை: தமிழிசை


புதுக்கோட்டை: காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று காலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை சென்றிருந்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு குழு அமைக்க வேண்டும் என்றுதான் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எனவே, காவிரி நதிநீரை பங்கிட்டு அளிக்கும் 9 பேர் கொண்ட குழு தான் அமைக்கப்படும் என்று தெள்ளத்தெளிவாக பதிலளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கால அவகாசம் முடிவடையும் நிலையில், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்பட்டு, தொடர்ந்து காரசார விவாதங்கள் நடந்து வரும் நிலையில், தீர்ப்பில் அவ்வாறு கூறப்படவேயில்லை என்று தமிழக பாஜக தலைவர் கூறியிருப்பது தமிழக விவசாய மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com