கூட்டுறவுச் சங்கத் தேர்தல்: அதிமுக பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ஒட்டி, அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ஒட்டி, அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
 தேனி மாவட்டம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான்.
 சேலம் மாநகர், புறநகர் மாவட்டங்கள்: முதல்வர் பழனிசாமி, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடாசலம்.
 வடசென்னை, தென் சென்னை மாவட்டங்கள்: இ.மதுசூதனன், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, எம்.பி., எஸ்.ஆர்.,விஜயகுமார், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்தியா.
 கிருஷ்ணகிரி மாவட்டம்: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி, வி.கோவிந்தராஜ்.
 தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள்: துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு.
 பெரம்பலூர் மாவட்டம்: ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன்.
 அரியலூர் மாவட்டம்: ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்ஜோதி, அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன்.
 வேலூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள்: அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், எம்.பி., வா.மைத்ரேயன், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபில், எம்.எல்.ஏ., ரவி. கன்னியாகுமரி மாவட்டம்-----தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ஏ.விஜயகுமார்.
 கரூர்: மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
 திண்டுக்கல்: அமைச்சர் சீனிவாசன், எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்டச் செயலாளர் வி.மருதராஜ்.
 ஈரோடு மாநகர், புறநகர் மாவட்டங்கள்: அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்.
 தூத்துக்குடி மாவட்டம்: அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் செ.ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன்.
 காஞ்சிபுரம் மாவட்டம்: முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், கணேசன், மீனவர் பிரிவுச் செயலாளர் முனுசாமி.
 திருப்பூர் மாவட்டம்: பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.
 நாமக்கல்: அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, அமைப்புச் செயலாளர் ராஜூ, விவிஆர் ராஜ்சத்யன்.
 திருச்சி மாவட்டம்: அமைச்சர் பி.தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.பி.,க்கள் ப.குமார், டி.ரத்தினவேல்.
 கோவை மாவட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ஜி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் பிஆர்ஜி அருண்குமார்.
 நீலகிரி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.,க்கள் ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.அர்ஜூனன், அமைப்புச் செயலாளர் புத்திசந்திரன்.
 விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி., ஆர்.லட்சுமணன் எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ.
 கடலூர்: அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.எல்.ஏ., செம்மலை எம்.பி., அருண்மொழித்தேவன்.
 ராமநாதபுரம்: ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அமைச்சர் எம்.மணிகண்டன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி.
 திருவள்ளூர்: வேணுகோபால் எம்.பி., அமைச்சர் பா.பென்ஜமின், எம்.எல்.ஏ.-க்கள் வி.அலெக்சாண்டர், சிறுணியம் பி.பலராமன்.
 திருநெல்வேலி: அமைப்புச் செயலாளர்கள் பி.எச்.மனோஜ் பாண்டியன், சுதா கே.பரமசிவன், அமைச்சர் ராஜலட்சுமி, இன்பதுரை எம்.எல்.ஏ., கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.
 சிவகங்கை: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், எம்.பி.-க்கள் அன்வர்ராஜா, செந்தில்நாதன்.
 மதுரை: அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா.
 தருமபுரி: அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ., முருகுமாறன்.
 திருவாரூர்: அமைச்சர் ஆர்.காமராஜ், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.
 நாகப்பட்டினம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.பி., கே.கோபால்.
 புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து.
 திருவண்ணாமலை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், அமைப்பு சாரா அணியின் கமலக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் தூசி கே.மோகன், கே.ராஜன்.
 விருதுநகர் மாவட்டம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன்.
 ஏப்ரல் 2 முதல்...கூட்டுறவு, பால், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை என பல்வேறு கூட்டுறவுத் துறை சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com