2025-இல் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் இல்லாத நிலையை அடையும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
2025-இல் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் இல்லாத நிலையை அடையும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
 உலக காச நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காசநோய் தடுப்புப் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள்
 மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு மடிக் கணினிகள் வழங்கும் திட்டம், காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டம், காசநோய் இல்லா சென்னையை உருவாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நிறுவியுள்ள 35 சிகிச்சை மையங்கள், காநோய் கண்டறியும் அதிநவீன கருவியுடன் கூடிய இரண்டு வாகனங்கள் ஆகிய அனைத்துத் திட்டங்களையும் முதல்வர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது: காசநோய் கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்களின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு, காசநோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து, நோயின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 அந்த நிதியும் வங்கி மூலம் நேரடியாகப் பயனாளிகளுக்கு சென்று சேருவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு தமிழ்நாடும் முழு ஒத்துழைப்பை நல்கி, அது நிறைவேற்றப்படும். காசநோய், குணமாக்கப்படக் கூடிய ஒரு நோய். உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் பூரண குணமடையலாம் என்றார்.
 சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில காசநோய் அலுவலர் (பொறுப்பு) டாக்டர் கே.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com