காவிரி: ஏப்-5 முதல் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
காவிரி: ஏப்-5 முதல் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
 பாரதி புத்தகாலயம் சார்பில் தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புரட்சியாளர்களின் புத்தகங்கள் என்ற கண்காட்சியை கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் சாதனைகள்விட, சோதனைகளே அதிகம்.
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் நேரிடும் என்பதால் பெயரளவுக்கு ஓர் ஆணையத்தை வைக்கலாம். இதனைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். முழுமையான அதிகாரம் பெற்ற ஆணையம் வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
 இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் அரசு போராடுகிறது என்றால், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பொது வேலை நிறுத்தம் செய்யாதது ஏன், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்காதது ஏன் என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
 எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com