புரட்சிக் களம் அழைத்தால்  நான் வருவேன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்!

புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் மக்கள் போராட்டம் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
புரட்சிக் களம் அழைத்தால்  நான் வருவேன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்!

சென்னை: புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் மக்கள் போராட்டம் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டது. அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 17-ம் தேதி விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 24-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவிட்டதையடுத்து சனிக்கிழமையன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் மக்கள் போராட்டம் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால்  நான் வருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com