மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம்: ஈரோடு மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம்! 

மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்று ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மண்டல மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம்: ஈரோடு மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம்! 

ஈரோடு: மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்று ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மண்டல மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திமுகவின் மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை அண்ணா நகர் பெரியார் திடலில் சனிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறுகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. கட்சி நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார்கள். மாநாட்டின் ஒரு பகுதியாக திமுக சிறப்புத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நதி நீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக வேறு எந்த ஓர் அமைப்பையும் ஏற்க மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் வகையில் மாநில அரசு செயல்பட்டால் போராட்டம் நடத்தப்படும்.  மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.   உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டின் நிறைவு நாளான திங்கள் அன்று மாநாட்டு மேடையில் 110 ஜோடிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com