காவிரி விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அதிமுக எம்.பி  முத்துக்ககருப்பன் அறிவிப்பு! 

காவிரி விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி  முத்துக்ககருப்பன் அறிவித்துளார்.
காவிரி விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அதிமுக எம்.பி  முத்துக்ககருப்பன் அறிவிப்பு! 

புதுதில்லி: காவிரி விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி  முத்துக்ககருப்பன் அறிவித்துளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது

ஆனால் அளிக்கப்பட்ட அவகாசம் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, பாராளுமன்றத்தில்  அதிமுக  எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு , 15 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கினார். அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் காவிரி நீதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஏற்படுத்தாவிட்டால், தற்கொலை செய்து கொள்வதற்கும் அதிமுக எம்.பிக்கள் தயாராக உள்ளதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்திலேயே அதிரடியாக பேசினார்.

அவருடன் சேர்ந்து அதிமுக எம்பிக்கள் மூன்று பேரும்  எம்.எல்.ஏ ஒருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய தயார் என கூறினர்.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி  முத்துக்ககருப்பன் அறிவித்துளார்.

இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று பேசியாதவது:

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்; நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன் -

காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்  அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன் . விவசாயிகள் பிரச்னையில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறிவந்தேன்.

காவிரி விவகாரத்தில் அனைத்து எம்.பிக்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்துவேன்.

கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. இதற்காக  பிரதமர் மோடியின் சட்டையை பிடித்தா கேட்க முடியும்?

காவிரி விவகாரத்திற்காக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே போராடினோம். சட்டத்தை இயற்றும்  இடத்தில் உள்ள நாங்களே நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடினோம். மக்களுக்கும், மாநிலத்திற்கும் சேவை செய்யவே எம்.பி. பதவி.

பதவி ராஜிநாமா எனது தனிப்பட்ட கருத்து, மக்களுக்காக நான் ராஜிநாமா செய்கிறேன். ஜெயலலிதா வழங்கிய பதவியை மக்களுக்காக ராஜிநாமா செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com