மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள்: கமல் புகார்

மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் புகார் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள்: கமல் புகார்

சென்னை: மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் புகார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் பங்குபெறுவதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்: கமல் ஞாயிறன்று தூத்துக்குடி செல்ல உள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களுக்குஇடையூறு நேரலாம் என்ற புகாரின் பேரில், அவர் பயணத்தில் ரசிகர்களை ரயில் நிலையங்களில் சந்திக்க தடை விதிக்கப்படலாம் என்று ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி  இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம் திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com