கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி இன்று தொடக்கம்

கோடை விழாவின் தொடக்கமாக நீலகிரி மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 10-ஆவது ஆண்டு காய்கறிக் கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் சனிக்கிழமை (மே 5) காலை
காய்கறிகளால் உருவாக்கப்பட்டு வரும் மெகா சைஸ் நந்தி.
காய்கறிகளால் உருவாக்கப்பட்டு வரும் மெகா சைஸ் நந்தி.

கோடை விழாவின் தொடக்கமாக நீலகிரி மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 10-ஆவது ஆண்டு காய்கறிக் கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் சனிக்கிழமை (மே 5) காலை தொடங்குகிறது. 
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் இரண்டு நாள்கள் காய்கறிக் கண்காட்சி நடைபெறுகிறது. 
நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தலைமை வகிக்கிறார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோடை விழா மற்றும் 10-ஆவது காய்கறிக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறாôர்.
விழாவில் அரசு முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி, சுற்றுலாத் துறை ஆணையர் பழனிகுமார், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், எம்எஸ்ஏ சாந்தி ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மில்லர், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் உமாராணி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். காய்கறிக் கண்காட்சியின் சிறப்பம்சமாக மெகா சைஸ் நந்தி சிலையானது பேரிக்காய் மற்றும் குடை மிளகாயால் உருவாக்கப்பட்டுள்ளது. 
இது தவிர பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக் கலைத் துறையினரால் காய்கறிகளால் 25 உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இதில் தேர்வு செய்யபடும் சிறந்த அரங்குகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 6) பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 


மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com