12ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில்,
ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவுசெய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.

இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை.தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும்  எனது  வாழ்த்துகள்.

வெற்றி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பில் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றிபெற்று தங்கள் துறையில் பல சாதனைகளை படைத்து நாட்டுக்கும், வீட்டுக்கும், தங்களது ஊருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வேண்டுகிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்த வித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com