காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு விடுத்த முக்கிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

காவிரி வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவை,

காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து புதுதில்லிக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும். இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பவையாகும்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து புதுதில்லிக்கு மாற்றவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

கர்நாடகாத்தில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வாதம் செய்தது.

காவிரி அமைப்பின் முடிவை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை எனில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கலாம் என்ற விதியை மாற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி வரைவு செயல் திட்டத்தில் திருத்தம் செய்து நாளை தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. 

காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டுமே உண்டு, மத்திய அரசுக்கு இல்லை. இதில் கர்நாடகா மற்றும் தமிழகம் மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. நீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவே இறுதியானது

காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க தமிழக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com