மேல்மருவத்தூரில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் செவ்வாய்க்கிழமை, வைகாசி மாத அமாவாசையையொட்டி பங்காரு அடிகளார் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையைத் தொடங்கி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வைகாசி அமாவாசையையொட்டி, வேள்வி பூஜையைத் தொடங்கி வைத்த பங்காரு அடிகளார். உடன் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதிகாலை 3 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
காலை 9 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை செய்யப்பட்டது. மாலை 4.50 மணிக்கு ஓம் சக்தி பீடம் அருகில் அமைக்கப்பட்ட பெரிய சதுர வடிவிலான யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை அவர் தொடங்கி வைத்தார். 
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். பெரிய யாக குண்டத்தைச் சுற்றிலும், சதுரம், செவ்வகம், அறுங்கோணம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 63 சிறிய யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களால் வேள்வி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெரிய யாக குண்டத்தில் நவ தானியங்களையும், ஹோமக்குச்சிகளையும் போட்டனர்.
பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட சக்தி பீடங்கள் மற்றும் வார வழிபாட்டு மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com