நாளை ஏலகிரி கோடை விழா: 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்திலுள்ள முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரிமலை கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள்

தமிழகத்திலுள்ள முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரிமலை கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்காக 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வேலூர் மாவட்டத்திலுள்ள கோடை வாசஸ்தலமான ஏலகிரி மலையில் இந்த ஆண்டு கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடக்கிறது. 
இவ்விழாவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ந.நடராஜன், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். 
கோடை விழாவையொட்டி, ஏலகிரியிலுள்ள சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல மண்டலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com