நீபா வைரஸ் காய்ச்சலால் தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

நீபா வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழகத்தில் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்
நீபா வைரஸ் காய்ச்சலால் தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

சென்னை: நீபா வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழகத்தில் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

கோழிக்கோடு மாவட்டம், சங்கரோது மருத்துவமனையில் நீபா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 50 வயதான பெண் ஒருவர் பலியானார். அவரது உறவினர்கள் 2 பேர், கடந்த 5 மற்றும் 18-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களது மரணத்துக்கு, நீபா வைரஸ் தாக்கியதே காரணம் என்று தெரிகிறது. 

இந்நிலையில், நீபா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 3 நாளில் இதுவரை செவிலியர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. நீபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 25 பேர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளாவில் 10 பேரைப் பலிகொண்ட நீபா (Nipah) வைரஸ் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இதுவரை புகார் வரவில்லை. தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை. கேரளாவில் உள்ள சுகாதாரத்துறையுடன் தொடர்பில் தான் உள்ளோம் என்று கூறினார். 

மேலும் தமிழகத்தில் நீபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்துவிட்டு மருத்துவமனையை அணுக வேண்டும் என கூறினார்.

நீபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

* பழம் தின்னும் வவ்வால்களின் சிறுநீரிலும், எச்சம் மற்றும் பன்றிகள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. 

* காய்ச்சல், கடுமையான தலைவலி, மயக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளைக் காய்ச்சலாக தீவிரமடையும். 

* வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாகும் போது கோமா ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

* நீபா வைரஸை குணப்படுத்த எந்த மருந்தோ, சிகிச்சையோ இல்லை.

* காய்ச்சலை கட்டுக்குள் வைப்பது போன்ற துணை சிகிச்சைகள் மூலமே வைரஸை கட்டுப்படுத்த முடியும்.

* வைரஸை கட்டுப்படுத்தினாலும், வலிப்பு, குணாதிசய மாற்றம் போன்ற நீண்டகால பாதிப்புகள் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com