ஸ்டெர்லைட்: லண்டனில் அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், லண்டனிலும் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.
ஸ்டெர்லைட்: லண்டனில் அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், லண்டனிலும் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் லண்டனில் வசித்து வருகிறார். லண்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்களையும், நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களையும் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான கிராம மக்கள் போராடி வந்த நிலையில், ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிக்கு அனுமதி கிடைத்தது போராட்டக்காரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தி, தங்களை நிரந்தர நோயாளிகளாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

100வது நாள் போராட்டத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டனர். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பதற்றம் நிலவுகிறது. ஆங்காங்கே பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com